அன்பிற்குரிய
நண்பர்களுக்கு,
வணக்கம்.
கோப்பெருஞ்சோழன்
என்ற சோழ மன்னனும் பிசிராந்தையார் என்ற புலவரும், ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே சிறந்த
நண்பர்களாக இருந்தார்கள். ஏதோ காரணத்தினால்,
கோபெருஞ்சோழனுக்கும் அவனுடைய இரண்டு மகன்களுக்கும் இடையே போர் தொடங்க இருங்தது. அப்பொழுது
ஒரு புலவர், கோப்பெருஞ்சோழனுக்கு அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்தினார். கோப்பெருஞ்சோழன்
இயற்றியதாகவும் பிசிராந்தையார் இயற்றியதாகவும் புறநானூற்றில் பல பாடல்கள் உள்ளன. அந்தப்
பாடல்களில் உள்ள கருத்துகளோடு கறபனையும் கலந்து ”கோப்பெருஞ்சோழன்” என்று ஒரு சிறு நாடகம் எழுதியுள்ளேன்.
மயிலுக்குப்
போர்வை அளித்த வள்ளல் பேகனை பற்றிய புறநானூற்றுப் பாடல்களோடு என்னுடைய கற்பனையும் கலந்து, “கொடை மடம் கொண்ட பேகன்”
என்று ஒரு சிறு நாடகம் எழுதியுள்ளேன்.
இந்த இரண்டு
நாடகங்களையும் https://sangamplays.blogspot.com
என்ற வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். ஆர்வமும் நேரமும் இருந்தால் அவற்றைப் படித்து
உங்கள் கருத்துகளைக் கூறுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்,
பிரபாகரன்